Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகநூலில் காதல்.. ஆபாச படத்தை வைத்து மிரட்டல்! – மோசடி வாலிபர் கைது!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:15 IST)
முகநூல் மூலமாக கல்லூரி மாணவிகளுடன் நெருக்கமாக பழகி அவர்களை பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கூவத்தூர் காரன்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்தி. சமையல் வேலை செய்து வரும் இவர் முகநூல் வாயிலாக சில பெண்களுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இவர் புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடனும் பழகி வந்த நிலையில் அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

பின்னர் அந்த பெண் குளிக்கும் வீடியோ காட்சிகளை அனுப்ப சொல்லி கேட்டு அதை தனது போனில் சேமித்துக் கொண்ட கார்த்தி அதை வைத்து பின்னர் அந்த பெண்ணை பணம் கேட்டு மிரட்ட தொடங்கியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் தன் தந்தையிடம் சொல்ல அவர் திருபுவனை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீஸார் செல்போன் சிக்னலை கொண்டு கார்த்தியை கைது செய்தனர். விசாரணையில் கார்த்தி பல பெண்களிடம் இவ்வாறாக தொடர்பில் இருந்ததும் ஆபாச வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

ஆபாச படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த உபி தம்பதிகள்.. அமலாக்கத்துறை விசாரணை..!

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments