Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவுடன் நன்கொடை: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:14 IST)
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு உடன் நன்கொடை அளிக்கலாம் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் அதிமுக திமுக மக்கள் நீதி மய்யம் உள்பட ஒருசில கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது விரைவில் இந்த கட்சிகள் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் காண இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருப்பதாக கூறப்படும் காங்கிரஸ் கட்சியும் விருப்ப மனு விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 25 முதல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றும் விருப்ப மனுவுடன் இணைத்து நன்கொடை தொகையையும் செலுத்தலாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் அறிவித்துள்ளார்
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதா என்பதை இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் விருப்ப மனு குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments