Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் ஆட்சிக்காக ஏங்கும் மக்கள்: ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (15:20 IST)
திமுக தலைமை ஏற்க மக்கள் ஏக்கத்துடன் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் அங்கு இவ்வாறு பேசினார். 
 
ஸ்டாலின் பேசியது பின்வருமாறு, திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரை விட அதிகமாக கொள்ளையடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டி வருகிறார்.
 
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மட்டுமின்றி துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் ஊழல் செய்து வருகின்றனர். 
 
பொதுமக்கள் திமுக ஆட்சிக்கு வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என பேசியுள்ளார். அதன் பின்னர் முன்னாள் நகரமன்றத் தலைவர் மயில்வாகணன் தலைமையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்