Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவசரமாய் கூடும் அமைச்சரவை: சிபிஐ ரெய்ட் எதிரொலியா?

அவசரமாய் கூடும் அமைச்சரவை: சிபிஐ ரெய்ட் எதிரொலியா?
, வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (20:22 IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மறுநாள், அதாவது ஞாயிற்றுகிழமை அமைச்சரவை கூடவுள்ளது. வழக்கத்திற்கு மாறாக அவசரமாக அமைச்சரவை கூட்டப்படுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ் உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
 
இந்த குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் எனவும் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் எனவும் செய்திகள் கசிகின்றன. இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் டிஜிபி ஜார்ஜ் குட்கா ஊழலை ஒப்புக்கொண்டார். எனவே இதன் காரணமாகதான் அமைச்சரவை கூடுவதாக கூறப்பட்டது. 
 
ஆனால், சமீபத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இவர்களது விடுதலை குறித்து ஆலோசனை நடத்தவே இந்த அவசர அமைச்சரவை கூட்டம் கூடுகிறது என தெரியவந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் தலைவன் அல்ல: என்ன ஆனது மு.க.அழகிரிக்கு?