Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளா? வாட்ஸப்பில் சுற்றும் போலி தகவல்!

Advertiesment
புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளா? வாட்ஸப்பில் சுற்றும் போலி தகவல்!
, புதன், 7 ஏப்ரல் 2021 (13:57 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் புதிய ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாகவும், அதன் கட்டுப்பாடுகள் என்றும் போலி தகவல் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் கடந்த சில வாரமாக மீண்டும் உயர தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று பேசிக் கொள்ளப்பட்டது.

ஆனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் போலி செய்தி ஒன்று வலம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 9 தொடங்கி 30 வரை ஊரடங்கு அமல்படுத்தப்போவதாகவும், அப்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்றும் ஒரு பட்டியலை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக தெரிகிறது.

ஆனால் தமிழக அரசு சார்பில் அவ்வாறாக எந்த அறிவிப்போ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழவேற்காடு அருகே படகில் சென்று வாக்களித்த இரு ஊர் மக்கள்!