Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு பிறகுதான் ரொம்ப உஷாரா இருக்கணும்! – கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (10:28 IST)
தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்துள்ள நிலையில் அடுத்த 28 நாட்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல குறைந்துள்ள நிலையில் சமீப வாரங்களில் தீபாவளி பண்டிகை காரணமாக பல இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

இந்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் செய்தி அனுப்பியுள்ளார். அதில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்தாலும், தீபாவளி பண்டிகையையொட்டி பல இடங்களில் மக்கள் அதிகமாக கூடியதாலும், தற்போது மழைக்காலமாக இருப்பதாலும் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் அடுத்த 14 முதல் 28 நாட்கள் வரை மிகவும் முக்கியமான நாட்கள் என கூறியுள்ள அவர் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மற்றும் நோய் பரவலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments