Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:51 IST)
நிவர் புயல் எதிரொலி: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது
 
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் சுகாதார மையங்களில் தேவையான ஜெனரேட்டர் வசதியை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் மருத்துவ மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
அதேபோல் புயல் நேரத்திலும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களையும் கண்டறிய சோதனைகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கொரோனா நிவாரண முகாம்களில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments