எதற்காக துப்பாக்கிச்சூடு? அரசு பதிலளிக்க உத்தரவு - நீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (11:51 IST)
தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அப்போது, பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த விவகாரம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பிலும் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. 
 
இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அமுதநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 9பேர் கொண்ட குழு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது குறித்து வருகிற 6ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments