Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை

Advertiesment
தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை
, வியாழன், 30 செப்டம்பர் 2021 (13:00 IST)
தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 

 
தொலைதூரத்தில் உள்ள இடங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை குறித்த நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்ற, தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த கடந்த முறை ஆட்சியில் இருந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 
 
ஆனால், தமிழ்நாடு அரசின் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இன்னும் பயன்படுத்தப்படாமலே இருந்து வருகிறது. எனவே இதனை பயன்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு அரசிடம் ஆம்புலன்ஸ் சேவைக்காக ஆகஸ்ட் 2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412EP ரக ஹெலிகாப்டர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலிண்டர் மானியம் ரத்து?