Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்த அரசுப்பள்ளி ..

Advertiesment
தமிழக பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவித்த அரசுப்பள்ளி ..
, செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (21:20 IST)
தற்போது நாகரீகம் மோகத்தில் உண்ணுகின்ற உணவிலிருந்து, செய்கின்ற வேலைகள் வரையும் ஏன் !? விளையாட்டிலும் கூட நாகரீகம் என்பது வளர்ந்து, வளர்ச்சியடைந்த நிலையில்., தற்போதைய தமிழர்களிடம் பண்டைய கால தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் என்றால் அது என்ன என்றும் முற்றிலும் தமிழகத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் மறந்துள்ளனர்.

இந்நிலையில் பல்லாங்குழி, பரமபதம், தாயம், டயர் விளையாட்டு, பெண்களின் கயிறு தாண்டுதல், குழை, குழையாய் கத்திரிக்காய், பச்சை குதிரை என்று ஏராளமான விளையாட்டுகளை சிறுவர்களிடம் கேட்டால் அது என்ன ? என்று தான் கேட்பார்கள், அப்படி நாம் மூதாதையர், பாட்டி, பாட்டன் காலத்தில் தோன்றிய இந்த கலைகள் மற்றும் விளையாட்டுகளை அரசு பள்ளி ஒன்று ஞாபகப்படுத்தியதோடு, அந்த விளையாட்டுகளே மாணவர்களும், மாணவிகளும் விளையாண்ட ஒர் அற்புத நிகழ்வு கரூரில் நிகழ்ந்துள்ளது.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரியின் அருகே அமைந்துள்ளது, காந்திகிராமம் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 1984 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில்., இந்த பள்ளியில் மட்டும் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியை பா.பூங்கொடி, நான்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 6 நபர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் 3 பேர், சிறப்பு ஆசிரியர் 3 பேர், அதுமட்டுமில்லாமல் மழலையர் வகுப்புகளுக்கு என்று தனியாக இரண்டு ஆசிரியர் பெருமக்களும், ஒரு பள்ளி உதவியாளர் என்றும், துப்புரவு பணியாளர் ஒருவர் என்று, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி நேர மையத்தில் ஒரு ஆசிரியரும், ஒரு உதவியாளரும், சத்துணவு மையத்தில் ஒரு ஆசிரியரும், இரு உதவியாளரும் என்று மொத்தம் 20 க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இந்த பள்ளி, ஏற்கனவே ஆட்டிசம் குழந்தைகளை அரவணைப்போம் என்ற தலைப்பில் ஆசிரியர் திலகவதி வழிக்காட்டுதலின் படி, கோபிநாத் என்ற மாணவர் தேசிய அளவில் ஆய்வறிக்கையினை சமர்பித்தார்.

தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் மாவட்ட அளவில் தேர்வு பெற்று கடந்த 4 வருடங்களாக மாநில அளவில்  சென்று வரும் பெருமையை பெற்றது இந்த பள்ளி என்பது ஒரு புறம் இருக்க, 2004 ம் ஆண்டில் படைப்பாற்றல் கல்விமுறையில் மாதிரி பள்ளி என்ற பெயரும் சிறப்பும் உண்டு, அதே போல, 2006 முதல் மூன்று முறை கலைநிகழ்ச்சிகளில் சிறந்த பள்ளியாக மாவட்ட ஆட்சியர் முன்னாள் மறைந்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்களிடம் பாராட்டு சான்றிதழ்களை பெற்ற அரசுப்பள்ளி, இவ்வளவு பெயர் பெற்ற இந்த பள்ளியில், இந்த பள்ளியில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர் திலகவதி, இந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் இரண்டு முறை விருதுகள் சமூக பணிக்கான சிறந்த பெண்மணி என்ற விருதும், கரூர் மாவட்ட சிறந்த பெண்மணி என்கின்ற விருதினை ஆசிரியர்கள் சார்பில் வாங்கினார் என்பது பெருமைக்குரியது. இதைவிட புத்தகத்திருவிழாவில் பணியாற்றியதை பாராட்டி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அவர்களிடம் கடந்த ஜூலை 27 ம் தேதி சிறப்பாக பணியாற்றியமைக்காக பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றார்.

இப்படி புகழ்பெற்ற இந்த பள்ளியும், பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திலகவதி அவர்களும் மாணவர்களை உற்சாகப்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், அந்த பள்ளியின் வளாகத்திலேயே பழமையை ஊக்குவிக்கும் பொருட்டும், பாட்டி, தாத்தா காலத்தின் தாயம் விளையாடுதல், பரமபதம், பல்லாங்குழி, கயிறு தாண்டுதல் எனப்படும் ஸ்கிப்பிங் ஜம்ப் முறை, கபாடி, பம்பரம் சுற்றுதல், டயர் ஒட்டி விளையாடுதல், பட்டம் பறக்குதல், குழை குழையாய் மந்திரிக்காய், ஒரு குடம் தண்ணீ ஊற்றி ஒரு பூ பூத்தது என்ற விளையாட்டுகளை ஞாபகப்படுத்தியதோடு, அந்த விளையாட்டினை அப்படியே அந்த மாணவ செல்வங்களும் முற்றிலும் விளையாடியது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இதுமட்டுமில்லாமல், ஆசிரியர்களும் மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு, மாணவர்களும் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து அவர்களுக்கு உற்சாகம் அளித்தனர். ஆங்காங்கே சடை முடிகள் கலைந்த சிறுமிகளுக்கு தானாகவே சடையை பிண்ணி விடும் ஆசிரியை திலகவதி, பள்ளி மாணவ, மாணவிகளை தன் குழந்தைகளாகவே பார்ப்பதோடு, அவர்களுக்கு தாயாகவும் விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமில்லாமல், தமிழக அரசு தற்போது வலியுறுத்தி வரும் வீடு தோறும் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் வளர்ப்பு ஆகிய திட்டங்களை இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும் செயல்படுத்தி வருவதோடு, தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து மரக்கன்றுகளையும், இந்த ஆசிரியை திலகவதி தத்துக் கொடுத்து வருகின்றார். மேலும், பள்ளியில் உள்ள வகுப்பறைகளில், வகுப்பறைகளில் நூலகம் என்கின்ற திட்டத்தினை நடைமுறைப்படுத்தி தமிழக அளவில் ஒரு தனிச்சிறப்பு இந்த பள்ளி விளங்க அரிய பலமுயற்சிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒத்துழைப்போடு, ஆசிரியை திலகவதி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி ஆசிரியை திலகவதியிடம், அதென்னங்க, மரக்கன்றுகளை தத்துக் கொடுப்பது என்று கேட்டால், மரக்கன்றுகளை நாம் நடுதல் என்கின்றோம், ஆனால், அந்த மரக்கன்றுகளை நட்டு விட்டால் பின்பு நீர் ஊற்றுவதில்லை, இதையே நாம் தத்துக் கொடுத்துவிட்டால், நம் பிள்ளைகளை போல நினைத்து நாமும் மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவோம், அதே நேரத்தில் தத்து எடுப்பவர்களும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள். ஆகவே மரங்களும் நம்பிள்ளைகள் என்று பாருங்கள் என்றதோடு, அதுவும் நம்பிள்ளைகள் தாங்க, ஒவ்வொருவரும் மரம் வளருங்கள், அப்போது தான் நமக்கு சுவாசிக்க காற்றும் வரும், மழை பெய்யவும், ஏதுவாக மரங்கள் சூழல்களை அமைக்கும் என்றார்.

தனியார் பள்ளிகளில் கூட பள்ளி ஆசிரியையோ, ஆசிரியரோ, ஒருவர் திட்டினால் ஊரே சேர்ந்து ஒன்று கூடி பல்வேறு போராட்டங்கள் நடத்தும் இந்த காலத்தில் பள்ளி பயிலும் மாணவிகளையும், மாணவர்களையும் குழந்தையாக பாவித்து, மரக்கன்றுகளையும் ஆங்காங்கே நட்டு ஒரு பசுமை சூழலை உருவாக்கி வரும் அரசுப்பள்ளி ஆசிரியை திலகவதியே பாராட்டியே தீரலாம் என்கின்றனர் இப்பகுதியின் பொதுநல ஆர்வலர்களும், சமூக நல ஆர்வலர்களும்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எரிசாராயம் கடத்தி, பாட்டிலில் விற்றவர் யார் என்று பொதுமக்களுக்கு தெரியும்- அமைச்சர் விஜய பாஸ்கர்