Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை: தமிழக அரசு!

Advertiesment
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை: தமிழக அரசு!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (19:40 IST)
தமிழகத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ள நிலையில் செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என தமிழக அரசு சற்று முன் அறிவிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது 
 
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை வைப்பது அல்லது பொது இடங்களில் விழாவை கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில் சமயங்களை பொதுமக்கள் தங்களது இல்லங்களில் கொண்டாடுமாறு கேட்டு கொள்ளப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையை பொறுத்தவரை கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இந்த செயல்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் செப்.15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; தமிழக அரசு.