தமிழகத்தை நோக்கி மான்டஸ் புயல் நடந்து வரும் நிலையில் தமிழக அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்துள்ளது.
நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளதால் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் காய்கறி பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
மேலும் கடற்கரைக்கு செல்வதையும் பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் நீர்நிலைகளின் அருகில் இந்த வெளியிலும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது
மேலும் வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு அரசு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் TNSMART செயலின் மூலம் அதிகாரபூர்வ அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.