சிங்கப்பூரில் இருந்து காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (07:59 IST)
ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்காக சர்வதேச டெண்டர் விடப்பட்டு உள்ள நிலையில் தற்போது காலி சிலிண்டர்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதை அடுத்து சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டர்களை நேரடியாக தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் சிங்கப்பூரிலிருந்து 248 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்துள்ளது. உற்பத்தியாகும் ஆக்சிஜனை நிரப்பி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு காலி சிலிண்டர்கள் இல்லாத நிலை இருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவை அடுத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சிங்கப்பூரிலிருந்து சிலிண்டர்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளார். சிங்கப்பூரில் கொள்முதல் செய்யப்பட்ட காலி சிலிண்டர்கள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் சென்னை கொண்டுவரப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments