Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர் இட ஒதுக்கீடு - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (21:51 IST)
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசின் அரசாணையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வன்னியர்களுக்கு 10.5% சீர்மரபினர் கலப்பு 7 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசாணையை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது 
 
தொழில் கல்வி உள்ளிட்ட அனைத்து படிப்புகளிலும் இட ஒதுக்கீடு முறை இந்த முறையின்படியே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இந்த ஆண்டு முதல் இந்த சிறப்பு ஒதுக்கீட்டு முறை அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த அரசாணையில் மேலும் கூறியிருப்பதாவது: அரசுப்‌ பணி நியமனங்களிலும்‌, கல்வி வாய்ப்புகளிலும்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள்‌ மற்றும்‌ சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ இதர
மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டம்‌ 8/2021 இயற்றப்பட்டது. அச்சட்டத்தின்‌ அடிப்படையில்‌, அரசுப்‌ பணி நியமனங்களில்‌ பின்பற்றப்பட்டு வரும்‌ இன சுழற்சி முறையை திருத்தி அமைக்க, சட்ட வல்லுனர்கள்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன்‌ விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்‌ என மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ சட்டமன்ற பேரவையில்‌ உறுதி அளித்திருந்தார்‌.
 
அதன்படி, சட்ட வல்லுநர்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர் தேர்வாணையத்துடன்‌ கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்த சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல்‌ செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌. மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல்‌ தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச்‌ சேர்க்கைகளும்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின்‌ அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும்‌.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments