தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டு அட்டை வைத்திருப்போருக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இதனை அடுத்து ரேஷன் கடை அதிகாரிகள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகளை தற்போது செய்து வருகின்றனர்
இந்த நிலையில் திடீரென பொங்கல் பரிசு டோக்கன் அதிமுகவினரால் வழங்கப்பட்டதாக திமுக தரப்பு குற்றஞ்சாட்டியது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றையும் திமுக தொடர்ந்து உள்ளது என்பதும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக அரசு இது குறித்த முக்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணிகளை நியாய விலை கடை பணியாளர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
பொங்கல் பரிசு தொகை அதிமுகவினரால் நியமிக்கப்பட்டதற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது