சண்டாளர் என்ற பெயரை நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில நாட்களாக சண்டாளர் என்ற சாதி பெயரை பயன்படுத்தியதாக சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது என்பதும் அதற்கு சீமான் பதில் அளித்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு ஒரு முக்கிய பரிந்துரையை செய்துள்ளது. இதன்படி சண்டாளர் என்று சாதி பெயரை பயன்படுத்த கூடாது என்றும் நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சண்டாளர் என்ற சாதி பெயரை பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.