Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்! – எடப்பாடியார் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (14:46 IST)
தமிழகத்தில் அனைவரும் இ-பாஸ் பெறும் வகையில் தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்காததாலும், இ-பாஸ் பெற்று தர இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் அதிகரித்துள்ளதாலும் இ-பாஸ் நடைமுறைகளை நீக்கவோ அல்லது எளிமைப்படுத்தவோ வேண்டும் என மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இ-பாஸ் நடைமுறைகளில் புதிய தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஆகஸ்டு 17 முதல் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும். இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டு எண், ரேசன் கார்டு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை இணைத்தால் உடனடி இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் தொழில்ரீதியான மற்றும் தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டும் மக்கள் இ-பாஸ் சேவையை பயன்படுத்துமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments