Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் தினசரி 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!

இன்று முதல் தினசரி 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!
, ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (09:42 IST)
இன்று முதல் தினசரி 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!
புரெவி புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக சென்னையில் உள்ள குடிசை பகுதி, புரெவி புயல் காரணமாக பெய்த மழை காரணமாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிட்ட தண்ணீர் காரணமாகவும் வெள்ளத்தில் மிதக்கின்றன. அவர்கள் தங்களது வீட்டை விட்டு தற்போது சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே குடிசை பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் சென்னையில் குடிசைப் பகுதி மக்களுக்கு இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரை மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது 
 
சமுதாய நலக்கூடங்கள் அம்மா உணவகங்கள் மூலம் குடிசையில் வசிக்கும் மக்களுக்கு உணவு தயாரித்து வழங்க திட்டமிட்டு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குடிசைவாழ் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
13ம் தேதி வரை மூன்று வேளையும் பொதுமக்கள் எந்தவித கவலையும் இன்றி இலவசமாக உணவை வாங்கி சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் குடிசைவாழ் பொதுமக்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி கட்சியில் 60 மாவட்ட செயலாளர்கள்: அர்ஜூனா மூர்த்திக்கு கூடுதல் அதிகாரம்!