தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையும் அதற்கு அனுமதி அளித்தது.
இதனை அடுத்து ரூபாய் 80 கோடி செலவில் கடலில் 134 அடிக்கு பிரமாண்டமான பேனா சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்த திட்டத்தை அரசு திரும்ப பெற உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைக்க முடிவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற இருப்பதாகவும் இது குறித்த முடிவு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.