Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு..!

Advertiesment
assembly

Mahendran

, வெள்ளி, 4 அக்டோபர் 2024 (11:02 IST)
தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
 
சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் ஜி.சிவக்குமார், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.பவானி, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கோவை இஎஸ்ஐ மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் டி.ரவிக்குமார், ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி கண் மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் வி.ராமலட்சுமி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முடநீக்கியல் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.குமாரவேல், திருச்சி கி.அ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், மதுரைமருத்துவக் கல்லூரி காது-மூக்கு-தொண்டை சிகிச்சைத் துறைபேராசிரியர் டாக்டர் எல்.அருள்சுந்தரேஷ் குமார், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஆர்.அமுதா ராணி,ராமநாதபுரம் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இதேபோல், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பி.லியோ டேவிட், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கதிரியக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜே.தேவி மீனாள், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவக் கல்லூரி தொழுநோய் சிகிச்சைதுறை இயக்குநர் டாக்டர் எஸ்.கலைவாணி, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி காது-மூக்கு-தொண்டை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.முத்துசித்ரா, தேனிமருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறை பேராசிரியர் டாக்டர் வி.லோகநாயகி, கரூர்மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கோவை மருத்துவக் கல்லூரிமருத்துவ தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் டி.ஜெயசிங், விருதுநகர் கல்லூரி முதல்வராகவும், கோவை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறை பேராசிரியர் டாக்டர் எம்.ரோகிணி தேவி, வேலூர்மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநாடுன்னா என்னன்னு தெரியுமா? நாம யார்னு காட்டுவோம்! - விஜய் அதிரடி அழைப்பு!