Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (13:04 IST)
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை வெளியிட்டது தமிழக அரசு. 
 
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
அந்த வகையில் தற்போது ஐ.எம்.ஏ தமிழக பிரிவு கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு செய்துள்ளது.
 
லேசான பாதிப்பு உள்ள ஒரு நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூபாய் 2,31,820 வசூலிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் கட்டணமாக ரூபாய் 4,31,411 என நிர்ணயம் செய்து உள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி லேசான அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் நாள் ஒன்றுக்கு 5,000 - 7,500 ரூபாய் வரை வசூலிக்கலாம். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களிடம் நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வரை வசூலிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments