ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000 ஆக நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக கட்டணத்திற்கு மணல் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு ஆற்று மணலின் விலையை நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000 ஆக நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆற்று மணல் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆற்று மணலை ஏழை மக்கள் சிரமமின்றி பெற புதிய வழிமுறைகளும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தன.