Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநரை இப்படித்தான் அழைக்க வேண்டும் : வித்யாசாகர் அதிரடி

ஆளுநரை இப்படித்தான் அழைக்க வேண்டும் : வித்யாசாகர் அதிரடி

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (12:52 IST)
இனி அரசு தொடர்பான கோப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளில் ‘மாண்புமிகு ஆளுநர்’ என்றுதான் குறிப்பிட வேண்டும் என, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 

 
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இனிமேல், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அரசு அலுவலகம் தொடர்பான கோப்புகளில் ஆளுநருக்கு முன்பு  ‘மாண்புமிகு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டும்.  தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மேதகு (His Excellencey) என்கிற வார்த்தையை இனிமேல் பயன்படுத்தக் கூடாது. 
 
ஆனால், வெளிநாட்டவருடான சந்திப்பின் போது ‘மேதகு’ என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனவே, மேதகு ஆளுநர் என்று அழைக்கும் முறை மாற்றப்பட்டு, தற்போது மாண்புமிகு ஆளுநர் என்று அழைக்கப்படும். 
 
இதுவரை அமைச்சர்கள் மற்றும் முதல் அமைச்சர் ஆகியோரைத்தான் மாண்புமிகு என்று அழைப்பது வழக்கமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து திரும்பிய இந்திய இளைஞர்கள்.. 60 லட்சம் வரை செலவு செய்ததாக அதிர்ச்சி தகவல்..!

கிணற்றில் விழுந்த 64 வயது கணவரை தன்னந்தனியாக காப்பாற்றிய 56 வயது மனைவி..!

கிளாம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது..!

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் செல்லும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியது..!

அடுத்த கட்டுரையில்
Show comments