Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு ஊழியர்களை ஆசை காட்டி மோசம் செய்த அரசு: ராமதாஸ்

Advertiesment
அரசு
, புதன், 26 அக்டோபர் 2016 (15:16 IST)
அரசு ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இம்மாத சம்பளத்தை 28ஆம் தேதி வழங்குவதாக ஆணை பிரப்பித்து, பின்னர் வழக்கம் போல் மாதத்தின் கடைசி நாளே ஊதியம் வழங்கப்படும் என்று அதை ரத்து செய்தது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அக்டோபர் மாத ஊதியத்தை நாளை மறுநாள் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.


 

 
தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களின் கோரிக்கைப்படி அவர்களுக்கு இம்மாத சம்பளம் 28ஆம் தேதி வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து பின்னர் வழக்கம் போல் மாதம் இறுதில் நாளில் தான் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
 
இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
தமிழக அரசு செயல்பாடு எந்த அளவுக்கு தடுமாற்றத்தில் உள்ளது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். அக்டோபர் மாத ஊதியம் 28ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்து அரசு ஆணை பிறப்பித்து, பின்னர் அதை ரத்து செய்து வழக்கம் போல் தான் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.
 
தமிழக அரசின் இந்த குளறுபடியால் அரசு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர் மாத ஊதியத்தை நாளை மறுநாள் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயுள் காப்பீட்டிற்கு எதிரான கடன் பெறலாமா??