கோமா நிலையில் தமிழக அரசு: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விளாசல்!
கோமா நிலையில் தமிழக அரசு: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விளாசல்!
தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என திமுக செயல்தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலிடம் வலியுறுத்தியுள்ளார்.
திமுக முதன்மை செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் உட்பட 6 எம்எல்ஏக்களுடன் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் அலுவலகம் சென்று சபாநாயகர் தனபாலை சந்தித்து சட்டசபையை உடனே கூட்டுவது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.
இதனை பெற்ற சபாநாயகர் தனபால் இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பதாக கூறியதாக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது, முற்றிலுமாக முடங்கி தமிழக அரசு கோமா ஸ்டேஜில் உள்ளதாக விமர்சித்தார்.
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது, தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராடும் நிலையில் உள்ளனர். ஆனால் முதல்வர் அவர்களை சென்று பார்க்கவில்லை. அரசு செயல்படாமல் முடங்கிப்போய் உள்ளது. இவற்றை எல்லாம் பற்றி சட்டமன்றைத்தை கூட்டி விவாதிக்க வேண்டியுள்ளது என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.