Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாஞ்சில் சம்பத்துக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

நாஞ்சில் சம்பத்துக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

நாஞ்சில் சம்பத்துக்கு அரசு பங்களா ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!
, சனி, 29 ஏப்ரல் 2017 (15:58 IST)
தற்போது தினகரன் அணியில் உள்ள அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அரசு வீடு ஒன்றை ஒதுக்கியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மதிமுகவில் வைகோவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில் சம்பத். கட்சியில் சேர்ந்த உடனே அவருக்கு இன்னோவா கார் ஒன்றையும் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பதவியையும் வழங்கினார் ஜெயலலிதா.
 
ஜெயலலிதா இறந்த பின்னர் தொடக்கத்தில் சசிகலாவை எதிர்த்த நாஞ்சில் சம்பத், உடனடியாக அந்தர் பல்டி அடித்து சசிகலாவை ஆதரித்து பேச ஆரம்பித்தார். அவர் சிறைக்கு சென்ற பின்னர் தினகரன் ஆதரவாளராக மாறினார் நாஞ்சில் சம்பத்.
 
தினகரன் மீது ஏகப்பட்ட புகார்கள், குற்றச்சாட்டுகள் வந்த போதும் அவர் தினகரனை உச்சத்தில் தூக்கி வைத்து புகழ்ந்து வந்தார். இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள தினகரனை இன்று வரை புகழ்ந்து தள்ளி வருகிறார் நாஞ்சில் சம்பத்.
 
தினகரனை ஒதுக்கி வைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அமைச்சர்கள் அறிவித்தனர். அதன் பின்னரும் தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகிறார் நாஞ்சில் சம்பத். ஆனால் தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்துக்கு அரசு வீடு ஒன்றை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வருகிறது.
 
தமிழறிஞர் கோட்டாவில் நாஞ்சில் சம்பத்துக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மணல் குவாரிகள் மூடல்