Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளங்கோவன், விஷ்ணு பிரசாத் குஸ்தி: அடி, உதை, கல்வீச்சு, உருவ பொம்மை எரிப்பு

இளங்கோவன், விஷ்ணு பிரசாத் குஸ்தி: அடி, உதை, கல்வீச்சு, உருவ பொம்மை எரிப்பு
, திங்கள், 6 ஜூன் 2016 (16:14 IST)
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும், சமீபத்தில் இளங்கோவனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று கலவரம் மூண்டது.


 
 
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளுக்கும் பஞ்சம் இல்லை, தலைவர்களுக்கும் பஞ்சம் இல்லை. தொண்டர்களை விட தலைவர்கள் அதிகம் என்று கிண்டல் அடிக்கும் அளவுக்கு ஒரே கட்சியில் இருந்து கொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு தொண்டர் கூட்டத்தை வைத்துக்கொண்டு கட்சிக்குள் கட்சி நடத்தி வருகின்றனர்.
 
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் தோல்வியடைந்தார். இவர் தனது தோல்வி குறித்து ஊடகங்களில் கருத்து கூறுகையில் காங்கிரஸ் கட்சி பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார்.
 
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விஷ்ணு பிரசாத்தை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள் இன்று சத்தியமூர்த்தி பவன் அருகே இளங்கோவன் உருவ பொம்மைய எரிக்க முயன்றனர்.
 
இதனை செல்போனில் படம்பிடிக்க முயன்ற இளங்கோவன் ஆதரவாளர் ஒருவரை அவர்கள் அடித்து உதைத்தனர். இதனையடுத்து சாத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியே வந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் இளங்கோவன் வாழ்க என ஆதரவாக கோஷ்மிட்டு வந்தனர்.
 
ஒரே இடத்தில் இளங்கோவனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கோஷங்க போட்டுக்கொண்டு தொண்டர்கள் மோதலில் இறங்கியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் விஷ்ணு பிரசாத்தின் ஆதரவாளர்கள் இளங்கோவன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
 
உடனடியாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. கல்வீசு சம்பவங்களும் நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்கள் தலையிட்டு காங்கிரஸ் தொண்டர்களின் கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளு குடிக்க முடியாத விரத்தியில் தற்கொலை செய்த போலீஸ்