தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அயல்நாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் வாழும் தமிழர்களிடையே தமிழ் பண்பாட்டினை பரவலாக புதிய முயற்சிகள் செய்ய வேண்டும் என்றும் தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் 12ஆம் நாள் செம்மொழி தமிழ் நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை நிறுவுதல் வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலங்கள் மற்றும் வங்கிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்