Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் முழக்கம்..!

Mahendran
புதன், 14 பிப்ரவரி 2024 (12:03 IST)
தொகுதி மறுவரையறை என்ற திட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பேராபத்து இருப்பதால் இந்த சூழ்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முழங்கியுள்ளார். 
 
தமிழ்நாட்டின் மீதும் தென்னிந்தியாவின் மீதும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறு வரையறை உள்ளதாகவும் மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி மக்கள் தொகையை குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
இதனால் மக்கள் தொகையை குறைக்கும் மாநிலங்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் என்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில்  ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசை பெரும் என்றும் அவற்றுக்கான பிரதிநிதித்துவம் அதிகமாகும் என்றும் இதை நாம் எதிர்த்தாக வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments