Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் மத்திய ஆயுதப்படை தேர்வு..! பிரதமர் மோடிக்கு ஆளுநர் நன்றி.!!

Senthil Velan
புதன், 14 பிப்ரவரி 2024 (11:52 IST)
மத்திய ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பை தமிழ் மொழியில் நடத்துவதற்கு  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர்வரும் அனைத்து மத்திய ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பை தமிழ் மொழியில் நடத்த மத்திய அரசு எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது எனக் கூறியுள்ளார்.
 
மேலும் தேர்வு எழுதுபவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், மத்திய ஆயுதப் படைகளில் அதிக பங்களிப்பை உறுதி செய்யவும், நமது பண்டைய தமிழ் மொழியை மேம்படுத்தவும் உதவும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரி காமெடியான கொள்கை இருக்க முடியுமா? – மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம்!
 
இதற்காக மாண்புமிகு பிரதமர் திரு.பிரதமர் மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றும்  தமிழ் மீதான பிரதமர் மோடியின் அபரிமிதமான அன்பையும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது என்றும் உண்மையான உணர்வை மேலும் மேம்படுத்துகிறது என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்வி.. ‘சொல்ல முடியாது’ என பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி..!

தப்பை தட்டிக்கேட்ட DSPயிடம் காரை பிடுங்கி இருக்காங்க! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

டெல்லியில் 20 பள்ளிகள்.. பெங்களூரில் 40 பள்ளிகள்.. 70 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இனி மழைதான்?! - வானிலை ஆய்வு மையம்!

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments