அரசின் செயல்பாடுகளில் திமுக உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவிர்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தொடர்ந்து அரசு விழாக்களில் திமுக எம்.பி, எம்.எல்.ஏக்களை அதிமுக புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஆய்வு கூட்டங்களில் எம்பியை எப்படி அனுமதிக்க முடியும் என முதல்வர் பேசியது ஜனநாயக விரோதம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி “அரசு விழாக்களில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்,. யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. விழாக்களில் கலந்து கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா இல்லை என முடிவு வந்தால் விழாக்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.