Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் பிரச்சனைகளை முதல்வரிடம் அமைச்சர்கள் தைரியமாக சொல்ல முடியுமா? கருணாநிதி கேள்வி

Advertiesment
கருணாநிதி
, வியாழன், 7 ஜூலை 2016 (21:29 IST)
மக்கள் பிரச்சனைகளை முதல்வரிடம் அமைச்சர்கள் தைரியமாக சொல்ல முடியுமா? என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 13ஆம் தேதி, தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சேலம், விழுப்புரம் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
 
தமிழகத்தில் 2012-2013ஆம் நிதியாண்டில் பால் உற்பத்தி ஒரு கோடியே 54 இலட்சம் லிட்டர். தற்போது இது 2 கோடியே 5 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. ஆவின் பால் கொள்முதல் 2013இல் 24 லட்சம் லிட்டராக இருந்தது. தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், ஆவின் நிறுவனம் பால் கொள்முதலைக் குறைத்து வருகிறதாம். சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் 31 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த நிலையில், தற்போது 25 இலட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
 
தமிழகத்தில் 17 ஒன்றியங்களில் சேலம், விழுப்புரம் ஒன்றிய உற்பத்தியாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், “கோட்டா சிஸ்டம்” அமல்படுத்தி, ஒரு லிட்டர் பாலுக்கு 200 மி.லி., முதல் 300 மில்லி லிட்டர் வரை உற்பத்தியாளர் களிடம் திரும்ப வழங்குகின்றனர். இதன் காரணமாக போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம் என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
உற்பத்தி ஆகும் பால் முழுவதையும் கொள்முதல் செய்வோம் என்று அறிவித்துவிட்டு, பால் உற்பத்தியாளர்களை இப்படி வஞ்சிப்பது நியாயமே அல்ல! ஆனால் இவர்களின் பிரச் சினைகளையெல்லாம் பேசித் தீர்ப்பதற்கு நாட்டில் மக்கள் நலனில் அக்கறையுள்ள ஓர் அரசு வேண்டுமே?
 
பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதில் ஆர்வமுள்ள முதல் அமைச்சர் வேண்டுமே? பிரச்சினையை எடுத்துரைக்கும் தைரியமுள்ள அமைச்சர் வேண்டுமே? தமிழகத்தில் இருக்கிறதா? பால் உற்பத்தியாளர் உள்ளிட்ட தமிழக மக்களின் விரக்தியைக் கண்டு வேதனைதான் மிஞ்சுகிறது என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவும், அதிமுகவும் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்