எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த முதல்வர்!

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (13:55 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

 
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து கடந்த மாதம் 22ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் காவிரி விவகராம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
அதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின், அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று சேர்ந்து பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் நாளை நேரில் சந்தித்த அழைப்பு விடுத்துள்ளார். இவர்களின் சந்திப்பு தலைமை செயலகத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments