Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு கடும் தண்டனை! – முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (12:08 IST)
இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கான அதிகப்படுத்தப்பட்ட தண்டனைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மூன்று நாட்கள் மட்டும் சட்டமன்ற கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் தொடங்கிய கூட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த சட்டசபை, மக்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்றும், இன்றும் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “வரதட்சணை கொடுமைகள் மீதான தண்டனை காலத்தை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

மேலும் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்