Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிக்கை மட்டும் விடுவார்.. அப்புறம் பிக்பாஸ் போயிடுவார்! – பங்கம் செய்த ஜெயக்குமார்

Advertiesment
அறிக்கை மட்டும் விடுவார்.. அப்புறம் பிக்பாஸ் போயிடுவார்! – பங்கம் செய்த ஜெயக்குமார்
, புதன், 16 செப்டம்பர் 2020 (10:03 IST)
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பேசும் கமல்ஹாசன் செய்தவை என்ன என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு தற்கொலைகள் காரணமாக தமிழகம் பரபரப்பாக உள்ள நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் இதுகுறித்த விவாதம் எழுந்தது. இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நீட் தேர்வு, ஆன்லைன் வகுப்புகள் முறைப்படுத்தல், கிஸான் திட்ட முறைகேடு உள்ளிட்டவை குறித்து விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “கமல்ஹாசன் கொரோனா வந்ததும் பிக்பாஸ் போல 100 நாட்கள் வீட்டிற்குள் பதுங்கி கொண்டார். இப்போது கொரோனா குறித்து கேள்வியெழுப்புகிறார். அறிக்கை விடுகிறார். அதேசமயம் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் தயாராகி விட்டார்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நகைக்கடைகளில் கேரள கடத்தல் தங்கம்!? -மஃப்டியில் போய் கலங்கடித்த அதிகாரிகள்!