அரசு மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான ஆலோசனை கூறினால் கண்டிப்பாக கேட்போம் என துரைமுருகனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்
செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள ஷட்டர் பழுதடைந்தது என்றும் அதனால் நீர் கசிந்து வீணாகி வருவதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இதனை மறுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெள்ளம் ஏற்பட்டது காரணமாக ஷட்டரில் கோளாறு ஏற்பட்டாலும் அது உடனே சரி செய்யப்பட்டது என்றும் தற்போது தேங்கி இருக்கும் நீர் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் துரைமுருகன் அவர்கள் வேண்டுமென்றே அரசு மீது பழியை போடுவதாகவும் கூறினார்
மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பாமல் ஆக்கபூர்வமான ஆலோசனை கூறினால் நாங்கள் கேட்டுக் கொள்வோம் என்றும் அதை விடுத்து பழுத்த அரசியல்வாதியான துரைமுருகன் அவர்கள் அரசின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துவது நல்லதல்ல என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்