Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஜித் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (18:37 IST)
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் இன்று காலை பிணமாகத்தான் மீட்கப்பட்டார். மறைந்த அந்த குழந்தைக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் சுஜித்தின் கல்லறைக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதுமட்டுமன்றி அவர் சுஜித்தின் குடும்பத்தினர்களுக்கு ரூபாய் 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் செய்தார். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடுக்காட்டுப்பட்டி சென்று சுஜித் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, சுகத்தின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து சுஜித் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் ரூபாயும், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும் என மொத்தம் 20 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தார் 
 
சுஜித் இழப்பிற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு இணை இல்லை என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இந்தத் தொகை சுஜித் குடும்பத்தினர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்த நிதி உதவியை அரசியல் என கருதாமல் சுஜித் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஒரு சிறிய உதவி என்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments