தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா? இடிச்சபுளி பழனிச்சாமியா? விக்கிபீடியாவில் மர்மநபர்கள் கைவரிசை

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (23:45 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் விக்கிபீடியா பக்கத்தில் புகுந்த மர்மநபர்கள் அவரது பெயரை இடிச்சபுளி பழனிச்சாமி என்று மாற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், முதல்வரை இடிச்சபுளி என்று விமர்சனம் செய்தார். இதனால் முதல்வரின் பெயரை விக்கிபீடியா பக்கத்தில் மாற்றியது தினகரன் ஆதரவாளராக இருக்கும் என்று கருதப்படுகிறது

இந்த நிலையில் ஒருசில நிமிடங்களில் முதல்வரின் விக்கிபீடியா பக்கத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி என்று மாற்றப்பட்டுவிட்டது. இருப்பினும் இடிச்சபுளி பழனிச்சாமி என்று இருந்தபோது ஸ்க்ரீன்ஷாட் எடுத்த டுவிட்டர் பயனாளிகள் அந்த பக்கத்தை தொடர்ந்து வைரலாக்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments