Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களின் வீட்டுக்கே சென்று அறிவுரை வழங்கிய டீச்சர்: முதல்வர் பாராட்டு

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (10:49 IST)
மாணவர்களின் வீட்டுக்கே சென்று அறிவுரை வழங்கிய டீச்ச
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. நேற்று வெளியான மத்திய அரசின் அன்லாக் 3.0 விதிமுறைகளின்படி ஆகஸ்ட் 31 வரை பள்ளிகள் கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் பெற்றோர்கள் மாணவர்களின் படிப்பு குறித்து கவலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு என்ற பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற டீச்சர் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று அவர்களுடைய படிப்புகளுக்கு வழிமுறைகளையும் அறிவுரைகளையும் கூறி வருகின்றார். மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடமும் ஆறுதலும் மன அழுத்தத்தை தவிர்க்க அறிவுரையும் கூறி வருகிறார் 
 
இதுகுறித்து புகைப்படத்துடன் பிரபல பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியை அடுத்து அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பள்ளிகள் திறக்காத இந்நிலையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகளையும், மன அழுத்தம் தவிர்க்க ஆறுதலும் கூறி, பெற்றோர்களிடமும் அறிவுறுத்தி வரும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசுப்பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி அவர்களின் செயல் நெகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments