தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நடைபெற்று வருகிறது.
இம்மாநிலத்தில் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் கல்வி கற்க இலவச புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்குகின்றன. தமிழகத்தைப் போலவே மாணவர்கள் பசியுடன் கல்வி கற்கக் கூடாது என்ற் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த மதிய உணவுத் திட்டம் 10 ஆம் வகுப்பு வரைதான் உண்டு.
இந்த நிலையில் அம்மாநில அரசு ஜூனியர் பட்டப்படிப்பி கல்லூர்களில் படிக்கும் மணவர்களுக்கு மதிய உணவு வ்ழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
இத்திட்டம் மாணவர்கள் ஆரோக்கியத்துடன் படிக்கவும், படிப்பை பாதியில் இடைநிறுத்துவதைத் தவிர்க்கவும்தான் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது.