Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வர்- கவர்னர் சந்திப்பு திடீர் ரத்து: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (18:25 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 பேரை விடுவிப்பது, புயல் நிவாரணம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது, ஆன்லைன் ரம்மி தடை விதித்தது, அண்ணா பல்கலைகழக சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்பது குறித்து ஆலோசனை செய்வது போன்ற விவகாரங்கள் குறித்து தமிழக கவர்னரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசிக்க இன்று மாலை சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது 
 
ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது ஆளுநர் மற்றும் முதல்வர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை
 
7 பேர் விடுதலை குறித்து இந்த சந்திப்பின் போது நிச்சயம் ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்பட பலருக்கும் இந்த சந்திப்பு ரத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments