தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் பொது போக்குவரத்தை குறைந்த அளவில் அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை காலை 6 திங்கள் கிழமை காலை 6 மணியோடு முடிகின்றது. கொரோனா இரண்டாம் கட்ட அலை கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் சமீப காலமாக குறைந்துள்ளது.
பலத்த கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமலுக்குப் பின்னர் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து தமிழகத்தில் 9000க்குள் வந்துள்ளது. கொரொனா பாதிப்பு அதிகமுள்ள திருப்பூர்,கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் சில தளர்களுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.
இந்நிலையில் இன்று மருத்துவ குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின். அதில் மருத்துவ குழுவினர், தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம். எனவே, கொரோனா தொற்று இருக்கும் மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளும், பாதிப்பு குறையாத மாவட்டங்களுக்கு ஊரடங்கு தொடரப்படும் என தெரிகிறது.
இதனிடையே, தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் பொது போக்குவரத்தை குறைந்த அளவில் (50 சதவீத இருக்கைகளுடன்) அனுமதிப்பது, ஜவுளி கடைகளுக்கு அனுமதி வழங்குவது ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 8 மாவட்டங்கள் தவிற பிற மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்படும் என தெரிகிறது.