பிராமணர் காலடியில் ஸ்டாலின் சரணடைவது ஏன் என தமிழக பாஜக தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
வரும் தேர்தலில் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து திமுக மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
50 ஆண்டுகளுக்கும் மேல் கட்சி நடத்தி வரும் ஒரு கட்சிக்கு ஆலோசனை செய்ய ஒருவர் தேவை என்றால் ஆளுமையுள்ள தலைவர், முடிவெடுக்கும் தலைவர் அந்த கட்சியில் இல்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில், இந்து விரோத கொள்கை, பிரிவினைவாதம், விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண் என பல பேர்பெற்ற தலைவர்களால் கட்டமைக்கபட்ட அறிவாளயம், ஒரு சர்வாதிகாரியாக ஸ்டாலின் இருந்தும் கட்டுப்படுத்த வழியின்றி புதிய முயற்சியாய் பிராமணர் பிகேயார் காலடியில் சரணடைவது தொண்டர்கள் மேல் உள்ள அவநம்பிக்கை தான் காரணமா? என கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.