Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோரொனா பீதி: சட்டப்பேரவையை முன்கூட்டியே முடிக்க முடிவு!!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (13:11 IST)
கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  
 
இதன் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மார்ச் 31 ஆம் தேதி வரை கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தமிழக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடிப்பது குறித்து நேற்று ஆலோசிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்படுகிறது. 
 
எப்ரல் 9 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்ட நிலையில் மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. காலை, மாலை என இரண்டு கூட்டங்கள் நடத்தி முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments