சபாநாயகர் தனபாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: அப்பல்லோவில் அனுமதி!
சபாநாயகர் தனபாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: அப்பல்லோவில் அனுமதி!
Publish Date: Tue, 04 Jul 2017 (10:03 IST)
Updated Date: Tue, 04 Jul 2017 (10:07 IST)
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நீடிக்கிறார் அதிமுகவின் தனபால். அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இதற்கு முந்தைய ஆட்சியின் போது தனபாலை சபாநாயகராக நியமித்தார். அதற்கு பின்னர் இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றிய போதும் தனபாலையே சபாநாயகராக நியமித்தார் அவர்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்த போதும் அவர் சசிகலா அணியிலேயே இருந்தார். தற்போது சசிகலா அணியே எடப்பாடி அணியாக மாறியுள்ள நிலையில் தலித் எம்எல்ஏக்கள் தனியாக கூட்டம் போட்டு தனி அணியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட்டது. இதற்கு சபாநாயகர் தனபால் தான் தலைமை வகிப்பதாக கூட கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதற்கு தினகரனுக்கு அதிமுகவில் தனி அணி உருவாகியது.
இப்படி ஆளும் அதிமுகவில் பல சிக்கல்கள் இருக்கும் சூழலில் தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. ஜூன் 14-ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டசபை இந்த மாதம் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை நாட்கள் போக மொத்தம் 24 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும்.
இந்நிலையில் சட்டசபை கூட்டம் நடந்துவரும் வேளையில் தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துணை சபாநாயகர் மூலம் இன்றைய சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.