Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசே மக்கள் வாயை மூடலாமா? சமூக வலைதள புதிய விதிகள் – டி.எம்.கிருஷ்ணா வழக்கு!

Advertiesment
Tamilnadu
மத்திய அரசு சமீபத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த புதிய சமூக வலைதள கட்டுப்பாடுகளுக்கு எதிராக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்திய அரசு மற்றும் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை கட்டுப்படுத்த சமீபத்தில் மத்திய அரசு சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு ட்விட்டர் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களும் மத்திய அரசின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனிமனித உரிமைகளை பறிக்கும் விதமாக மத்திய அரசின் கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளை; மாஸ்க்கை கழற்றி பார்த்தால் அதிர்ச்சி! – மதுரையில் பரபரப்பு!