Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 வது பிறந்தநாள் காணும் தியாகி சங்கரய்யா

Advertiesment
100 வது பிறந்தநாள் காணும் தியாகி சங்கரய்யா
, வியாழன், 15 ஜூலை 2021 (15:59 IST)
பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழக அரசியலில் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா. இவர் கடந்த  1922 ஆம் அழ்ண்டு ஜூலை 15 ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, தேசத் தலைவர்,  காமராஜ்,  உளிட்ட தேசிய தலைவர்கள், தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுடன் நேரிடையாகப் பழக்கம் கொண்டவர்.

 இன்று 100 வது அகவை காணும் சங்கரய்யா, தீக்கதிர், ஜனசக்தி, உள்ளிட்ட ஏடுகளில் ஆசிரியராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். சட்டப்பேரவை உறுப்பினராகவும்,  மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநில குழுவின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மேலும், 8 ஆண்டுகள் சிறைவாசமும், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவரது அரசியல் மற்றும் போராட்ட வாழ்வு பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது. சங்கரய்யாவின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்: கமல்ஹாசன்