Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை.. நிர்வாண படத்தை வெளியிட்டதால் பரிதாப முடிவு..!

ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை.. நிர்வாண படத்தை வெளியிட்டதால் பரிதாப முடிவு..!
, புதன், 26 ஜூலை 2023 (07:50 IST)
திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்ற பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவர் கடனை குறித்த காலத்தில் திருப்பி செலுத்திவிட்டதாக தெரிகிறது. இருப்பினும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டிய லோன் கொடுத்த நிறுவனம், ராஜேஷின் புகைப்படத்தை நிர்வாணமாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மார்பிங் செய்து அனுப்பி உள்ளதாக தெரிகிறது. 
 
இதனால் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்ததாக கருதிய ராஜேஷ்  தற்கொலை செய்து கொண்டார். அவமானம் தாங்காமல் அவர் பூச்சி மருந்தை கொடுத்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை: தமிழர் பள்ளிகளில் சாதி பாகுபாடு நிலவுகிறதா? 200 பள்ளிகள் மூடப்பட என்ன காரணம்?