Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் தொகுதியும் காலி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (08:18 IST)
அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி ஏற்கனவே காலியாக இருக்கும் நிலையில் தற்போது கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் விரைவில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கருணாநிதி எம்.எல்.ஏ ஆக இருந்த திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் நேற்று அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் திருவாரூர் தொகுதி காலியான தொகுதி என்று தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது.
 
ஒரு தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் விரைவில் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிரது. இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியை இப்போதே முக்கிய கட்சிகள் தொடங்கிவிட்டது என்பதால் இரு தொகுதிகளிலும் தேர்தல் களை ஆரம்பித்துவிட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments