Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழப்பு! – உறவினர்கள் போராட்டம்!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (15:39 IST)
திருவண்ணாமலையில் சாராய கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரை கடந்த சில தினங்கள் முன்னதாக சாராய கடத்தல் வழக்கு தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவரை திருவண்ணாமலை அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கமணி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தங்கமணியின் உறவினர்கள், காவல்துறையினர் தாக்கியதன் காரணமாகவே தங்கமணி உயிரிழந்ததாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய விசாரணை மேற்கொள்வதாக ஆட்சியர் பேசியதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments